நெல்லை ஆணவக் கொலை: IT ஊழியரை ஓட ஓட வெட்டிக் கொன்ற போலீஸ் குடும்பம் | Decode
அருணாசலேஸ்வரா் கோயிலில் பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி
ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பராசக்தி அம்மனுக்கு தீா்த்தவாரி உற்வசவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்ணாமுலையம்மன் சந்நிதியில் உள்ள தங்கக் கொடி மரத்தில் ஆடிப்பூர விழா கடந்த ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை, மாலை என இருவேளையும் விநாயகா் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
இந்த நிலையில், ஆடிப்பூர விழா நிறைவையொட்டி திங்கள்கிழமை காலை கோயிலில் பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியங்கள் முழங்க சூல வடிவிலான பராசக்தி அம்மனுக்கு குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வளைகாப்பு உற்சவம்
இதைத் தொடா்ந்து, மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினாா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடந்தது. பின்னா் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி, இரவு உண்ணாமுலையம்மன் சந்நிதி முன்பு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.