செய்திகள் :

Divya Deshmukh: மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்தார் திவ்யா தேஷ்முக்; இந்தியா சாதனை!

post image

ஜார்ஜியாவில் இந்த மாதம் தொடக்கம் முதல் மகளிர் செஸ் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய வீராங்கனைகளான கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இதன் மூலம், செஸ் வரலாற்றில் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதினர்.

2025 FIDE Women's World Cup - திவ்யா தேஷ்முக் - கோனேரு ஹம்பி
2025 FIDE Women's World Cup - திவ்யா தேஷ்முக் - கோனேரு ஹம்பி

இதன்மூலம், மகளிர் செஸ் உலகக் கோப்பையை முதல்முறையாக இந்தியர் வெல்லும் வரலாறும் போட்டிக்கு முன்பாகவே இந்தியா வசம் வந்துவிட்டது.

ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு இறுதிப்போட்டி சுற்றுகளும் டிராவில் முடிந்ததது.

இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் திவ்யா தேஷ்முக்.

மறுபக்கம், உலக ரேபிட் சாம்பியன் வென்ற கோனேரு ஹம்பிக்கு இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது திவ்யா தேஷ்முக், 2021-ல் இந்தியாவின் 21-வது கிராண்ட் மாஸ்டரானார்.

மேலும், 2023-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற திவ்யா தேஷ்முக் செஸ் ஒலிம்பியாட்டிலும் தங்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

FIDE: 'வரலாற்றுச் சாதனை' - உலக செஸ் சாம்பியன் திவ்யா; வெள்ளி வென்ற கோனேரு; குவியும் வாழ்த்துகள்!

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில்மோதிய திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி இருவரும் இந்தியர்கள். இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வ... மேலும் பார்க்க

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியர்கள்: வெல்லப்போவது யார்? - சூடுபிடித்த உலக செஸ் கோப்பை போட்டி!

ஜார்ஜியாவில் 'ஃபிடே மகளிர் உலகக் கோப்பை' செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள், உலக சாம்பியனும் ... மேலும் பார்க்க

Divya Deshmukh : கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெற்ற 19 வயது இந்திய வீராங்கனை - எப்படி சாதித்தார்?

'செஸ் உலகக்கோப்பை!'ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலகக்கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் தகுதிப்பெற்றிருக்கிறார். இதன் ம... மேலும் பார்க்க

Gukesh: குரோஷியா செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் குகேஷ்; மூன்றாம் இடம் பிடித்த கார்ல்சன்!

குரோஷியாவின் சாக்ரெப்பில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் (Super United Rapid and Blitz) தொடரில் நடப்பு உலக சாம்பியன் குகேஸ் ரேபிட் பிரிவில் சாம்பியன் வென்று அசத்தியிருக்கிறார்.... மேலும் பார்க்க