ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.
இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது. ‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தங்கம் விலை இன்றைய நிலவரம்!
இந்த நிலையில் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இந்த நிலையில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி, பிரியங்கா காந்தி, ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்துகொண்டு முழுக்கமிட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கையில் பேனரையும் ஏந்தியிருந்தனர்.