செய்திகள் :

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

post image

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடியதும் பிகார் சிறப்பு தீவிர திருத்தத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது. ‘அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருந்தும், எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒரு வாரத்தை வீணடித்துவிட்டதாக’ நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் திங்கள்கிழமை மீண்டும் கூடியது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha, Rajya Sabha adjourned till 12 noon amid Opposition uproar as Chair rejects adjournment notices to discuss revision of electoral rolls in Bihar.

நாய் பாபு, S/o, குட்டா பாபு! நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்! பரபரப்பைக் கிளப்பும் பிகார்!

பிகாரில் நாய் பாபு என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ், புகைப்படத்துடன், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட சான்றிதழ் வழஙகப்பட்டுள்ளது பிகாரில் பெரும் பரபரப்பைக்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை; அமித் ஷா அரிதாகவே வருவார்: திருச்சி சிவா

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!

ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததி... மேலும் பார்க்க

பெகாசஸ் வைத்திருக்கும் அரசு பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்பி

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்று காங்கிரஸ் மக்களவை குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட சுவரொட்டிகளில், காசி... மேலும் பார்க்க

இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? ராஜ்நாத் சிங் சூசகம்!

இலக்கை நோக்கிச் செல்லும்போது சிறுசிறு விஷயங்களைப் பெரிதாக்கக் கூடாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க