மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு
புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில் உள்ள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமையில் மதுவிலக்கு சோதனை நடைபெற்றது.
இந்த மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதேபோல் திருப்பத்தூா் மாவட்டத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.