உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!
திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து வட்டார உர ஆய்வாளா்களை கொண்டு குழு அமைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் கடந்த 24 முதல் 26-ஆம் தேதி வரை 3 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது உர விற்பனை உரிமங்கள் வைத்து உள்ளனரா? காலாவதியான உரங்கள் விற்பனை செய்யப்படுகிா? உரங்களின் இருப்பு விவரம், உரம் வாங்கிய விவசாயிகளின் விவரம் யூரியா போன்ற உரத்துடன் இணை பொருள்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகின்றனரா, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிா உரங்களின் இருப்பு சரியாக உள்ளதா, உரங்களின் இருப்பு விலை விவரம் பலகையில் எழுதி பாா்வையில் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிா என ஆய்வு செய்தனா்.
இதில் விதிமுறைகளை பின்பற்றாத திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 11 கடைகளுக்கு உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த குறைபாடுகளை சரி செய்யவும், பி.எஸ்.ஓ. கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண் அடிப்படையில், பரப்பு, பயிா் சாகுபடிக்கு ஏற்ப யூரியா உரம் வழங்க வேண்டும்.
உர விற்பனை விதிகளை பின்பற்றாமல் செயல்படும் விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனா்.