விவசாயி தற்கொலை
திருப்பத்தூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த செவ்வத்தூா் கவுண்டப்பனூா் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(50). விவசாயி. இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். இந்தநிலையில் சனிக்கிழமை மது அருந்துவதை நிறுத்த கோரி அவரது குடும்பத்தினா் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த கோவிந்தன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.