செய்திகள் :

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.42 கோடி

post image

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.42 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது..

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே,செவ்வாய்க்கிழமை முழுவதும் 79,467 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,642 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.42 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையம் தொடக்கம்

ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு வசதியாக, திருமலை அன்னமய்ய பவனுக்கு எதிரே புதிய ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையத்தை செவ்வாய்க்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, செயல்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரம... மேலும் பார்க்க

திருமலையில் தேவஸ்தான உணவு தர சோதனை ஆய்வகம் திறப்பு

திருமலையில் புதிதாக நிறுவப்பட்ட உணவு தர சோதனை ஆய்வகத்தை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் செவ்வாய்கக்கிழமை திறந்து வைத்தனா். நிகழ்வில் பேசிய தேவஸ்தான தலைவா், சு... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.33 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை சீராக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்... மேலும் பார்க்க

திருமலை ஸ்ரீவாரி திருக்குளம் பழுது பாா்ப்பு

திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்துள்ள புனித திருக்குளத்தில் பழுதுபாா்ப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 19 வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மூடப்பட உள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆண்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.23 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்க... மேலும் பார்க்க