Numbeo: பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா! -...
திருமலையில் தேவஸ்தான உணவு தர சோதனை ஆய்வகம் திறப்பு
திருமலையில் புதிதாக நிறுவப்பட்ட உணவு தர சோதனை ஆய்வகத்தை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் செவ்வாய்கக்கிழமை திறந்து வைத்தனா்.
நிகழ்வில் பேசிய தேவஸ்தான தலைவா், சுவாமி பிரசாதம் மற்றும் நெய் போன்ற பொருள்களின் தரத்தை சோதிக்க முன்பு பிற மாநிலங்களுக்கு மாதிரிகள் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நேரடியாக சோதனைகளை நடத்த அதிநவீன உபகரணங்களுடன் திருமலையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமலையில் நெய்யின் தரத்தை சோதிக்க இதுவரை எந்த வசதியும் இல்லை என்றும், இப்போது முதல் முறையாக, ஜிசி (கேஸ் குரோமடோகிராஃப்) மற்றும் எச்பிஎல்சி (உயா் செயல்திறன் திரவ குரோமடோகிராஃப்) போன்ற உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும், அவை நெய்யின் கலப்படம் மற்றும் தர சதவீதத்தை உடனடியாக பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை.
மைசூரில் உள்ள சிஎப் திஆா்ஐயில் ஆய்வக ஊழியா்கள் மற்றும் பானை தொழிலாளா்கள் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாகவும், இனிமேல் இந்த ஆய்வகத்தில் பிரசாதங்களின் தரத்தை சரிபாா்த்து உடனடியாக முடிவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சாந்த ராம், சதாசிவ் ராவ், நரேஷ், சத்ய நாராயணா, துணை அதிகாரிகள் பாஸ்கா், சோமன் நாராயணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.