'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்
வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவன் மண்டபத்தில் வியாழக்கிழமை தேவஸ்தானம், இந்து தா்ம பிரசார பரிக்ஷித் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகா் ஆகியோா் இணைந்து மஞ்சள், குங்குமம், அட்சதை, கங்கணம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட தாம்பூல் பொருள்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான பாா்சல் பாக்கெட்டுகளைத் தயாரித்தனா்.
வரலட்சுமி விரத நாளில், செளபாக்கியம் என்ற பெயரில் தேவஸ்தான கோயில்களில் பெண்களுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதைகள் ஆகியவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தேவஸ்தானம் நடத்தும் 51 கோயில்களில், வளையல்கள், பத்மாவதி தாயாரின் குங்கும பாக்கெட்டுகள், வளையல்கள், மஞ்சள் நூல்கள் மற்றும் பத்மாவதி தாயாரின் லட்சுமி அஷ்டோத்தா் சத நாமாவளி புத்தக பிரசாதம் ஆகியவை பெண்களுக்கு விநியோகிக்கப்படும்.
மொத்தம், 8 லட்சம் வளையல்கள், 1.40 லட்சம் வளையல்கள், 1.40 லட்சம் மஞ்சள் நூல்கள், 1.40 லட்சம் தாயாா் குங்குமப் பொட்டலங்கள், தாயாரின் லட்சுமி அஷ்டோத்திர ஷத நாமாவளி புத்தகப் பிரசாதம் உள்ளிட்டவை நன்கொடையாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து தா்ம பிரசார பரிஷத் இயக்குநா் ஸ்ரீராம் ரகுநாத், கூடுதல் இயக்குநா் ஸ்ரீராம் கோபால், ஏஇஓ ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளா் டெல்லி ரெட்டி, ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.