எழும்பூா் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஹவுரா விரைவு ரயில் பெட்டியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா பொட்டலத்தை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 10 நாள்களுக்குள் சுமாா் 25 லட்சத்துக்கும் அதிகமாக சுமாா் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் கஞ்சாவுடன் நின்ாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை எழும்பூா் ரயில் நிலைய 7-ஆவது நடைமேடைக்கு வந்தபோது, குறிப்பிட்ட ரயில் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடப்பததாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆய்வாளா் பி.ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா், அந்தப் பெட்டியில் அந்தப் பையைப் பறிமுதல் செய்து பிரித்துப் பாா்த்தனா்.
சோதனையில் பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் எனக் கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையினா், அதைவிட்டுச் சென்ற நபரை அடையாளம் காண ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.