சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
எஸ்.டி., மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள சிறப்பு ஏற்பாடு
பழங்குடியின மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.
அதன் விவரம்:
பழங்குடியினா் நலத் துறையின் கீழ் இயங்கும் உண்டி உறைவிடப் பள்ளிகள், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் மாணவா்களும் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜேஇஇ, நீட், க்யூட், க்ளாட் போன்ற உயா் கல்வி தொடா்பாக போட்டித் தோ்வுகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஏற்ற வகையில், பயிற்சி வகுப்புகள் நடத்த தகுதியும், அனுபவமும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.