துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
பழ ஜூஸ், சோள ரொட்டி, சூப்! உடற்பயிற்சி இன்றி 26 கிலோ குறைத்தது எப்படி? - ரகசியம் பகிரும் போனி கபூர்
பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர். அதிக உடல் எடையுடன் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போனி கபூர் தனது தலையில் புதிய முடிகளை செயற்கையாக செய்தார். இப்போது உடல் எடையில் மேலும் ஒரு மாற்றத்தை செய்துள்ளார்.
குறுகிய காலத்தில் போனி கபூர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கிறார். அவர் தனது உடல் எடையை குறைத்து வாலிபர் போன்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். எடை பருமனுள்ள ஒவ்வொருவரும் உடல் எடையை குறைக்க எவ்வளவோ முயற்சிகள் செய்கின்றனர். உடற்பயிற்சி மையத்திற்கு செல்கின்றனர். பிட்னஸ் சென்டர்களுக்கும் செல்கின்றனர். ஆனாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
சிலர் இதற்காக ஆபரேஷன் கூட செய்து கொள்கின்றனர். ஆனால் போனி கபூர் தான் எந்த வித உடற்பயிற்சி மையத்திற்கும் இதற்காக சென்றதில்லை என்று தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உடல் எடையில் 26 கிலோவை குறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். போனி கபூர் தனது உடல் எடை குறைப்பின் ரகசியத்தை தெரிவித்துள்ளார். அதில், காலையில் பழ ஜூஸ் மற்றும் சோள ரொட்டியை உணவாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இரவு உணவை அடியோடு நிறுத்திவிட்டதாகவும், இரவில் சூப் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டதாகவும், உணவு விசயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாகவும், எடையை குறைக்கவேண்டும் என்ற மன உறுதி வேண்டும் என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார். தனது உடல் எடையை குறைப்பதற்கு தனது மனைவி ஸ்ரீதேவிதான் காரணம் என்றும் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''எனது மனைவி ஒரு முறை என்னிடம் எனது முடி பிரச்னைக்கு எதாவது தீர்வு காண்பதற்கு முன்பு முதலில் உடல் எடையை குறையுங்கள் என்று தெரிவித்தார். அதனால் உடல் எடையை குறைத்துள்ளேன். ஸ்ரீதேவி எப்போதும் எனது உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். ஒரு முறை என்னிடம் உங்களை முதல் முறையாக பார்த்தபோது ஒல்லியாக உயரமாக பார்க்க அழகாக இருந்தீர்கள். ஆனால் இப்போது குண்டாகிவிட்டீர்கள் என்று தெரிவித்தார். உடனே நான், நீ எனது வாழ்க்கையில் வந்த பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும் என்று சேட்டேன். அதோடு நான் மீண்டும் ஒல்லியாக மாறினால் பல பெண்களுக்கு என்னை பிடித்துப்போகும். அதனை நான் விரும்பவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் ஆமாம் ஆமாம் என்று தெரிவித்தார்.” என பேசி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...