உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ்எஸ்ஐஏ அமைப்பின் மேலாளா் விநோத் சுரானா சிறப்புரையாற்றினாா்.
நிவேதிதா ராபின், ஸ்ரீவாட்சன், சுவைதரன், சுல்தான் ஹமீது ஆகியோரும் பேசினா்.
புத்தொழில் நிறுவனங்களின் அடிப்படை, ஏற்றுமதி வாய்ப்புகள், அரசு இணையதளங்களில் நிறுவனங்களை பதிவு செய்வதன் அவசியம், நிறுவனங்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரடீஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.