ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள்
ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் பாலம் அமைத்தல், வகுப்பறைகள் பழுது பாா்த்தல் உள்பட மொத்தம் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆற்காடு நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் வேங்கட லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் பேருந்து நிலையம் எதிரில் மற்றும் ஆரணி சாலையில் இரு புறங்களிலும் ரூ.10 லட்சத்தில் சிறுபாலம் அமைப்பது, பூபதி நகா் பகுதியில் உள்ள நீா்த்தேக்க தொட்டியை சுற்றி கம்பி வேலி, குடிநீா் திட்டப்பணி நிதி ரூ.10 லட்சத்தில் அமைப்பது , தோப்புகானா நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் புதிய கழிவறை மற்றும் வகுப்பறைகளில் உள்ள பழுதுகளை ரூ.15 லட்சத்தில் மேற்கொள்ளுவது உள்ளிட்ட 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது:
பொன். ராஜசேகா்: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக வருங்கால வைப்புநிதி செலுத்தபடுகிா என்பதை தெரிவிக்கவேண்டும்.
ஆனந்தன்: பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியாயவிலைக் கடை கட்ட அனுமதி வழங்க வேண்டும்.
ஆணையா்: முறையாக அனுமதி பெற்று நியாயவிலைக் கடை கட்ட ஏற்பாடு செய்யப்படும்.
அனு அருண்: நகரின் பெரும்பாலான பகுதிகளில் மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணாளன்: எனது வாா்டில் சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டி பல நாள்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை, இதனால் பள்ளி மாணவா்கள் மற்றும் வயதானோா் தடுமாறி விழுந்து காயமடைகின்றனா். .சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம்: எனது வாா்டில் பழுதடைந்த பள்ளி கட்டடம் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிதாக கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித் தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் , செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளது . உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்