ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
Eng vs Ind : ''பேசுறவங்க பேசிக்கோங்க, ஆனா இதுதான் பெஸ்ட் டீம்!' - மார்தட்டும் கம்பீர்
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அவர் பேசியதாவது, ''இந்த இந்திய அணி தங்களுக்கான வரலாற்றை தாங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரையும் பின்பற்றவில்லை. இந்திய அணிக்காக கடுமையாக முயன்று போரிடும் குணமுடைய வீரர்கள் இவர்கள். எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த டெஸ்ட் போட்டிதான் சரியான மெசேஜ்.
'Transition' என்கிற வார்த்தையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இந்தியாவின் மிகச்சிறந்த 18 வீரர்கள் இவர்கள்தான். இன்றைக்கு இந்த அணி ஆடியிருக்கும் விதத்திலிருந்தே இந்த வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள்.

5 செஷனுக்கு பேட்டிங் ஆடி அதுவும் 5 வது நாளில் அழுத்தத்தோடு பேட்டிங் ஆடி இங்கிலாந்துக்கு எதிராக போட்டியை டிராவில் முடிப்பது லேசான விஷயமில்லை. சுப்மன் கில் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. அவர் மீது சந்தேகம் இருந்தவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி பேசத்தான் தெரியுமே ஒழிய, கிரிக்கெட்டை புரிந்துக்கொள்ள தெரியாது. கில் மீதான அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அவர் ஆடியிருக்கிறார். ரிஷப் பண்ட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும். துரதிஷ்டவசமாக அவர் இந்தத் தொடரிலிருந்து வெளியேறுகிறார். பும்ரா அடுத்தப் போட்டியில் ஆடுவாரா இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.' என்றார்.