செய்திகள் :

ENGvIND : ஸ்டோக்ஸ் டிரா கேட்டப்போ ஏன் கொடுக்கல? - விளக்கும் கேப்டன் கில்

post image

'டிராவில் முடிந்த போட்டி...'

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது.

கில்
கில்

போட்டிக்கு முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, ஸ்டோக்ஸ் டிராவில் முடித்துவிடலாம் என கேட்ட போது ஏன் ஒத்துக்கொள்ளவில்லை என்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

கில் பேசியதாவது, 'எங்களுடைய பேட்டிங்கை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நாங்கள் பிட்ச்சைப் பற்றி மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பந்திலுமே எதோ ஒன்று நிகழ்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பந்தாக மனதில் வைத்தே கடக்க விரும்பினோம். ஆட்டத்தை எவ்வளவு இழுத்து எவ்வளவு நேரம் நின்று ஆட முடியுமோ அவ்வளவு ஆட வேண்டும் என நினைத்தோம்.

ஜடேஜா
ஜடேஜா

'ஏன் டிரா கொடுக்கல?'

ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆட்டம் சதத்துக்கு தகுதியானது என நினைத்தோம். அதனால்தான் அவ்வளவு சீக்கிரமாக டிராவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இங்கே ஒவ்வொரு போட்டியுமே கடைசி நாளின் கடைசி செஷன் வரை செல்கிறது. இதிலிருந்து ஒரு அணியாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. கடைசிப் போட்டியை வென்று சீரிஸை டிரா செய்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

'பும்ரா ஆடுவாரா?'

நீங்கள் எவ்வளவு ரன்களை அடித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நம்முடைய தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெர்சியை அணிந்து களத்துக்கு வருகையில் பதற்றமாகத்தான் இருக்கும். அதுவே நான் எந்தளவுக்கு தேசத்துக்காக ஆடுவதை நேசிக்கிறேன் என்றும் காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் என்னுடைய ஆகச்சிறந்த ஆட்டத்தை அனுபவித்து ஆட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம்.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

இந்த மாதிரியான பிட்ச்களில் ஒன்றிரண்டு பேட்டர்கள் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவது ரொம்பவே முக்கியம். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு அது நடக்கவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் ஆடிவிட்டோம். அடுத்தப் போட்டியில் பும்ரா ஆடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.' என்றார்.

Eng vs Ind : ''பேசுறவங்க பேசிக்கோங்க, ஆனா இதுதான் பெஸ்ட் டீம்!' - மார்தட்டும் கம்பீர்

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் ... மேலும் பார்க்க

Eng vs Ind : 'அதனால மட்டும்தான் 'டிரா' கேட்டேன்!' - காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!

'டிராவில் முடிந்த போட்டி...'இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மெ... மேலும் பார்க்க

ENGvIND : வாள் வீசிய ஜடேஜா; கடுப்பான இங்கிலாந்து; டிராவில் முடிந்த மான்செஸ்டர் டெஸ்ட்

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பெரிய முன்னிலையை எடுத்த போதும், இந்திய அணியின் சிறப்பான ப... மேலும் பார்க்க

"இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்" - Ind vs Pak ஆசிய கோப்பை போட்டிக்கு எம்.பி எதிர்ப்பு

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இனி இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.அந்த சம்பவத்தின்போதே, BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா... மேலும் பார்க்க

"நீங்கள் இதைக் கேட்டிருக்கவே கூடாது" - பாகிஸ்தானுடனான போட்டி தொடர்பாக நிருபரிடம் தவான் கோபம்

முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைப... மேலும் பார்க்க

kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப... மேலும் பார்க்க