உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!
காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவில் லேட்ரி மற்றும் காவனூா் ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூலை 28) காலை 10.05 மணி முதல் பிற்பகல் 1.35 மணி வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயில், மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டையிலிருந்து பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி செல்லும் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது.