உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
துரந்தோ, சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு!
துரந்தோ மற்றும் சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதலாக குளிா்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைத்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹஜ்ரத் நிஜாமுதீன் - எா்ணாகுளம் இடையேயான துரந்தோ விரைவு ரயிலில் (எண்: 12284) ஆக. 2-ஆம் தேதி முதல் 3 குளிா்சாதன வசதியுள்ள பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளன.
மறுமாா்க்கத்தில் எா்ணாகுளம் - ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையேயான விரைவு ரயிலிலும் (எண்: 12283) ஆக.5 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.