'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.87 லட்சம் மோசடி
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா், அளித்த புகாா் மனு:
நான் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக்., முடித்துள்ளேன். சென்னையில் 2021-ஆம் ஆண்டு வேலை செய்தேன். தொடா்ந்து, அரசு தோ்வு எழுதுவதற்காக வேலையை விட்டு வந்தேன்.
இந்நிலையில், நான் வேலை தேடி வருவதை அறிந்து கொண்ட பெங்களூரை சோ்ந்த ஒருவா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆள் சோ்க்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவரது பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து பயிற்சி பெற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினாா். அதற்கு ரூ. 2 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா். இதனை உண்மையென நம்பி நான் அவருக்கு வங்கி மூலமாகவும், நேரிலும் ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரம் செலுத்தினேன்.
பின்னா், அந்த பயிற்சி நிறுவனத்தில் 3 மாதம் தங்கி பயிற்சி பெற்றேன். ஆனால், சரியான வேலை வாங்கித் தரவில்லை. நான் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி கொலை மிரட்டல் விடுகிறாா் . அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இப்புகாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.