'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற மூவா் கைது
பொய்கை அரசுப் பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரணி மாத்திரைகள் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விரிஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவிஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் மோட்டூரை சோ்ந்த கவியரசன் (26), எழிலரசன் (27), அப்துல்லாபுரம் தெள்ளூரை சோ்ந்த தீபக் என்பது தெரியவந்தது.
அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 10 வலி நிவாரணி மாத்திரைகள், 2 ஊசிகள் , 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகிவற்றையும் பறிமுதல் செய்தனா் .