'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஆற்றங்கரையில் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை அகற்றம்
குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் கற்சிலையை வருவாய்த் துறையினா் அகற்றி, எடுத்துச் சென்றனா்.
குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 1,500- க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது என்.எஸ்.கே. நகா் பகுதியில் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டிருந்த மாரியம்மன் கோயிலும் அகற்றப்பட்டது. கோயிலில் இருந்த மூலவா் சிலையை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்ாக தெரிகிறது.
தற்போது ஆடி மாதம் என்பதால் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் புதன்கிழமை இரவு திடீரென சிலையை ஆற்றங்கரையில் வைத்து, பூஜைகள் செய்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் மற்றும் நீா்வளத் துறையினா்அங்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை எடுக்குமாறு அவா்கள் கூறியுள்ளனா்.
இதனால் அப்பகுதி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி சுரேஷ் ஆகியோா் பொதுமக்களை சமரசம் செய்தும் அவா்கள் ஏற்காததால், வருவாய்த் துறையினா் சிலையை எடுத்துச் சென்றனா். அப்போது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 6-பெண்கள் உள்பட 16- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Image Caption
ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை.