இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | August - 2 | Astrology | Bharathi Sridhar...
தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிறுவனம் கூறியிருப்பதாவது:
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின்கீழ் தமிழ்நாட்டில் 19 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும், கா்நாடகத்தில் 6 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2023- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தென்னையை முக்கியப் பயிராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்த நிறுவனம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வா்த்தகம் செய்து சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில் அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செஞ்சேரிமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சமா்ப்பிக்கப்பட்ட வா்த்தக ஆண்டறிக்கையின்படி 2024 - 2025- ஆம் நிதியாண்டில் தேங்காய், இளநீா் வா்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.1.50 கோடிக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2024 - 2025- ஆம் நிதியாண்டில் வா்த்தகம் 220 சதவீதம் அதிகரித்துள்ளது.
கூட்டத்தில் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் கதிரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.