செய்திகள் :

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ திருச்செந்தூரில் போலீஸுடன் பிரச்னையா? - விள‌க்கும் பாடகர் வேல்முருகன்!

post image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகரும் முருக பக்தருமான வேல்முருகன் அங்கு காவலர்கள் சிலரிடம் வாக்குவாதம் செய்கிற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக, என்ன நடந்தது என வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம்.

திருச்செந்தூர் குடமுழக்கு விழா

''திருச்செந்தூர் முருகனுக்கே பொருத்தமான 'தலையா கடல் அலையா'ங்கிற பாட்டுக்கு ஏற்ப மூணு நாளா அங்க ஜனங்க கூட்டம் அலை மோதிட்டிருக்கு. நேத்து என் கச்சேரி. அவ்வளவு மக்கள் ரசிச்சாங்க. கச்சேரிக்கு கச்சேரியுமாச்சு முருகனைத் தரிசிச்ச மாதிரியும் ஆச்சுன்னு நானுமே பாடிட்டு சாமி கும்பிட்டுட்டு என் பாட்டுக்கு தங்கியிருந்த ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டிருந்தேன்.

அப்பதான் டிவியிலிருந்து வர்றேன்னு ஒரு பொண்ணு வந்தாங்க. கும்பாபிஷேகம் பத்தி கச்சேரி பத்தில்லாம் பேசிட்டு யாகசாலை நடக்கிற இடத்துல போய் வீடியோ ஷூட் பண்ணலாம்னு கூப்பிட்டாங்க.

அப்பவே நான் சொன்னேன். பாதுகாப்பு ரொம்ப கெடுபிடியா இருக்கு. நாம கிடைக்கிற ஒரு இடத்துல இருந்து பேசிடலாமேனு சொன்னேன்.

ஆனா அவங்க கேக்கலை. யாகசாலை நடக்கிற இடத்துக்குப் போகலாம்னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. ஆனா அந்தப் பக்கமிருந்த சில போலீஸ்காரங்க அந்தப் பகுதியில் அனுமதிக்க மறுத்தாங்க. அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை. லட்சக்கணக்கான பேர் கூடியிருக்கிற இடத்துல பாதுகாப்புக் குறைபாடுனு ஏதாவது நடந்தா அவங்கதானே பொறுப்பு?

பாடகர் வேல்முருகன்

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’

நான் பேசிக் கேட்டுப்பார்க்கலாம்னு பேசிட்டிருந்த காவலர் ஒருத்தர் நாங்க அன்னதானம் நடக்கிற இடத்துக்குப் போக முயற்சி செய்யறதா நினைச்சுச் சத்தம் போட்டதுதான் எனக்கும் கொஞ்சம் கடுப்பாயிடுச்சு.

'ஏங்க நான் சாப்பிட வரலைங்க. நேத்து இங்க என்னுடைய கச்சேரிதான் நடந்தது. நான் ஒரு பின்னணிப் பாடகர்னு சொன்னேன்.. அந்தப் போலீஸ்காரங்கல்ள்ல சிலருக்கும் என்னைத் தெரியலை. அதனால நான் ஒண்ணைச் சொல்ல அவரு பதிலுக்கு ஒண்ணு சொல்லனு சில நிமிடங்கள் அங்க பாக்குறவங்களூக்கு ஒரு வாக்குவாதம் போலவே இருந்திச்சு.

எடிட் செய்து போட்டிருக்காங்க

பிறகு என்னைத் தெரிஞ்ச சில அதிகாரிகள் வர, நிலைமை சுமூகமாச்சு.

ஆனா அதுக்குள் அந்த காட்சி சமூக ஊடகங்கள்ல வந்துடுச்சு. அதுவும் நான் காவலர்கள்கிட்டப் சத்தமா பேசற காட்சிகளை மட்டும் எடிட் செய்து போட்டிருக்காங்க.

thiruchendur

இது என்னங்க சோதனை? கும்பாபிஷேக முடிச்சுட்டு உடனே பிளைட்டப் பிடிச்சு சென்னை வந்தா, வந்து இறங்குறதுக்குள்ளே பல நண்பர்கள்கிட்ட இருந்து போன் மேல போன். நான் ஏதோ கும்பாபிஷேகத்துல போய் வாக்குவாதம் பண்ணி கலட்டா பண்ற மாதிரி ஒரு தோற்றம் உண்டாகிடுச்சு.

என்னதான் நாம ஒதுங்கிப் போனாலும் அப்பப்ப நம்மைப் பத்தி ஏதாவது ஒரு சர்ச்சை நியூஸ் எப்படியாவது வந்திடுது. என்ன செய்யறதுன்னே தெரியலை.

கச்சேரி நல்லபடியா முடிஞ்சதில்லையா, அதுல கண் திருஷ்டி பட்ட மாதிரின்னு நினைச்சுக வேண்டியதுதான்” என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுல... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 10: சோகமான கேரக்டர்கள்ல தான் நடிப்பேனா; எனக்கு கிளாமர் வராதா? - நடிகை ஷோபா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, தன்னோட நடிப்பால அசர வெச்ச, பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்களாலும் 'மகளே', 'மோளே'ன்னு கொண்டாடப்பட்ட நடிகை... மேலும் பார்க்க

தோழியை திருமணம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நடிகை - உண்மை வெளிப்பட்டதால் கண்டித்த ரசிகர்கள்!

மலையாள சின்னத்திரையில் 'கூடெவிடே' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரார்த்தனா. இவரது தோழி ஆன்ஸி. ஆன்ஸி மாடலாக உள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் வைத்து ... மேலும் பார்க்க

``வாழ்நாள் முழுவதுமான சினிமாவின் முதல்படி..'' - நடிகையாகும் மகள் விஸ்மயாவுக்கு மோகன்லால் வாழ்த்து!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் நடித்துவருகிறார். அவரைத்தொடர்ந்து மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார். விஸ்மயா தாய் தற்காப்... மேலும் பார்க்க

"கூமாபட்டியை விட்டுட்டு சென்னையில் தங்கப்போறேன்; ஏன்னா!" - வைரல் இளைஞர் தங்கபாண்டி பேட்டி

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்துலயே கிடையாது" என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, 'இனி சென்னையில் வசிக்கப்போகிற... மேலும் பார்க்க

`அப்பா பாஜக மத்திய அமைச்சர் என்பதால் எனக்கெதிராக...' - சுரேஷ் கோபியின் மகன் ஆதங்கம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக உள்ளார். அவரது மகன் மாதவ் சுரேஷ் சினிமாக்களில் நடித்துவருகிறார். சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்துள்ள ஜானகி வி/எஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா... மேலும் பார்க்க