அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
கொளத்தூர் தொகுதி சென்றதால் இன்று புது வலிமையைப் பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் ரூ. 17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை சென்று வீடு திரும்பியபிறகு அவர் முதல்முறையாக தனது சொந்தத் தொகுதிக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!
இன்று கொளத்தூர் சந்திப்பில்,
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்,
பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.9.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,
கொளத்தூரில் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம்,
பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்குப் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம்,
ரெட்டேரியில் ஏசி பேருந்து நிறுத்தம் என ரூ.17.65 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்!
நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!" என்று பதிவிட்டுள்ளார்.
உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று!
— M.K.Stalin (@mkstalin) August 5, 2025
இன்றைய #KolathurVisit-இல்,
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், ரூ.18.26 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்,
… pic.twitter.com/rgnvmuJXGA
Tamilnadu chief minister Mk stalin's X post on kolathur visit
இதையும் படிக்க |நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு