Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ...
Sivakarthikeyan: "என்னோட இந்தப் படத்தை பார்ட் 2 எடுக்கலாம்; ஆனால்" - சிவகார்த்திகேயன் கலகல பேச்சு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என இரண்டு படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் 'Nasscom' என்ற சேனலுக்கு நேர்காணல் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தான் எடுக்க விரும்பும் பார்ட் 2 திரைப்படம் குறித்தும் தனது குழந்தைகள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில் தனது படங்களில் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பும் படம் எது என்ற கேள்வி பதிலளித்திருக்கும் சிவகார்த்திகேயன், "முதல்ல எனக்கு இரண்டாவது பாகம் என்றாலே பயம்தான். நல்ல படத்தை இரண்டாவது பாகம் எடுத்து, கெடுக்க வேணாம்னு நினைப்பேன். ஆனால், 'மாவீரன்' படத்துக்கு இரண்டாவது பாகம் எடுத்தால் நல்லாயிருக்கும்" என்று கூறியிருக்கிறார்.
ரொம்ப ஜாலியான அப்பாதான் நான்
தனது குழந்தைகள் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியவர், "எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். குழந்தைகளைக் கொஞ்சுவது மட்டும்தான் என் வேலை. அவங்களை முழுப்பொறுப்போடு பார்த்துக் கொள்வது என் மனைவிதான்.
ரொம்ப கண்டிப்பான அப்பா கிடையாது நான். முதலில் என் குழந்தைகள் என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்தாங்க. அப்புறம் 'இவன் எதும் பண்ணமாட்டா'னு அவங்களுக்கே புரிஞ்சிடுச்சு. ரொம்ப ஜாலியான அப்பாதான் நான்" என்றார்.

பெண்கள மரியாதையோட நடத்தணும்; பொறுப்போட படம் எடுக்கணும்
"உண்மையில் ஆரம்பத்தில் அப்படி பெண்களைக் கம்பீரமாக, மரியாதையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது. நானும் அதைப்பற்றியெல்லாம் யோசிச்சதில்லை.
ஆனால், நாம் செய்த தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வது, புரிந்து கொள்வது, படித்துத் தெரிந்துகொள்வது, என்னுடைய முந்தையப் படங்களில் செய்தவற்றைத் திருத்திக் கொள்வது எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறினேன்.

'கனா' திரைப்படத்திலிருந்துதான் அந்த எண்ணம் மாறியது. படம் பார்த்தவர்கள் பெண்ணின் கதையை, கனவை, வாழ்வைச் சொன்னதற்காகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். அதிலிருந்து பெண்களைச் சரியாக, பொறுப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் எனப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன். குழந்தைகள், பெண்கள் நம்ம படத்த பார்க்குறாங்க, அந்தப் பொறுப்போட படம் எடுக்கணும் எனப் பொறுப்பு வந்துவிட்டது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...