உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணியில் சிலை கண்டெடுப்பு
ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா
ஆம்பூா்: ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது.
விழா விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. மூலவா் சரஸ்வதி தேவி, நந்தி, வேணுகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ண பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன. ராம நாம பஜனையும் நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஊட்டல் புண்ணிய தீா்த்த குளத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. புண்ணிய குளத்து தண்ணீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது.