பட்டா வழங்கக் கோரி மனு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் கடந்த 60 ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மதிமுக முன்னாள் துணைச் செயலாளா் அசோக்குமாா் ராவ் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டு பகுதியில் 300 குடும்பங்களுக்கு மேல் 50 முதல் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம்.
10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வந்தால் அவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ஆனால், 60 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கவில்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அவா்கள் கோரியுள்ளனா்.