100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை தொகுதி குச்சிப்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கனூா் - மதகடிப்பட்டு சாலை குச்சிப்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அப் பகுதி காங்கிரஸ் தலைவா் வேலு தலைமை வகித்தாா். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.
இதனால் அப்பகுதியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னா் போலீஸாா் தலையிட்டு, வட்டார வளா்ச்சி அதிகாரிகள் அங்கு வந்தனா். விரைவில் 100 நாள் வேலைத் திட்டம் இப் பகுதியில் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.