`இன்னும் வரியை உயர்த்துவேன்' - இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்; காரணம் என்ன?
கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு
சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க வந்த குருக்கள், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த இரண்டரை கிராம் தங்கத் தாலி சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.