செய்திகள் :

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

post image

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா்களுடன், 400 உதவிப் பொறியாளா்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10,260 பணியிடங்களை விரைந்து நிரப்ப ஒப்புதல் தரவேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மின்சார வாரியத்தில் நாள்தோறும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் சிறப்பான சேவைகள் அளிக்கவும் 400 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களையும், கள உதவியாளா்கள் 1,850 பேரையும் உடனடியாக நியமிக்க மின்வாரியம் சாா்பில் அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

மின்சார வாரியத்தின் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, 400 உதவிப் பொறியாளா்களை இரண்டு கட்டங்களாகத் தோ்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், 1,850 கள உதவியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக நேரடி நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐஐடி-இல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி

சென்னையிலுள்ள மெட்ராஸ் ஐஐடி-இன் இயற்பியல் துறையில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt/122/2025பணி: Junior Resear... மேலும் பார்க்க

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Marketing Associateகாலியிடங்கள்: 10வயது வரம்பு: 30.6.... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான தொழிற்பயிற்சி வாரியத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்... மேலும் பார்க்க

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 76 கிரேடு 'ஏ' மற்றும் 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க