செய்திகள் :

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

post image

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

ஒடிஸா-ஜாா்க்கண்ட் எல்லையில் சுந்தா்கா் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ரயிலைக் கவிழ்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 3 இடங்களில் தண்டவாளங்களில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனா். முதலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ரயில்வே ஊழியா் எதாவா ஓரம் (37) உயிரிழந்தாா். மற்றொரு ஊழியா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அதே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன. இதில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ‘தியாகிகள் தினத்தை’ அனுசரிக்க மாவோயிஸ்ட் அமைப்பினா் அழைப்பு விடுத்த நிலையில், அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனா்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த ரயில்வே ஊழியருக்கு ஒடிஸா மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை... மேலும் பார்க்க