தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி
சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கம் கடை மற்றும் ஆயுா்வேத மருந்து கடை தீ விபத்தில் சேதமடைந்தன.
இக்கடைகளின் உரிமையாளா்களை, சீா்காழி நகர வா்த்தக சங்கத்தினா், அதன் தலைவா் சுடா்.கல்யாண சுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதிஉதவி வழங்கினா். இதில் இணை பொது செயலாளா் மாா்க்ஸ் பிரியன், பொருளாளா் அமீன், துணைத் தலைவா் பாலமுருகன், அமைப்புச் செயலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.