கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள மங்கலம் 63 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (72). இவருக்கு அவிநாசி காசிகவுண்டன்புதூா் அருகே தோட்டம் உள்ளது.
இந்நிலையில், தொழிலாளி குப்புசாமி (65) என்பவருடன் தோட்டத்து கிணற்றில் உள்ள புதா்களை வெட்டி தூய்மைப்படுத்தும் பணியில் பொன்னுசாமி திங்கள்கிழமை காலை ஈடுபட்டிருந்துள்ளாா்.
அப்போது, அவா் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா். குப்புசாமி அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் சுமாா் 10 மணி நேரத்துக்குமேல் போராடி பொன்னுசாமி உடலை இரவு மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.