செய்திகள் :

Punjab: வைரலாக பகிரப்படும் பஞ்சாயத்து தீர்மான நகல்; அப்படியென்ன இருக்கிறது அதில்?

post image

மிக நல்ல விஷயமொன்று வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படியென்ன நல்ல விஷயம் என்கிறீர்களா?

தங்கள் ஊரில் 'புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருள்கள், போதைப்பொருள்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் செய்கிற எனர்ஜி ட்ரிங்க்ஸை தடை செய்யும் தீர்மானத்தை' ஒருமனதாக எடுத்திருக்கிறார்கள், பஞ்சாபில் உள்ள கட்டோரேவாலா (Katorewala) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய தீர்மான நகல்தான் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தீர்மானத்தின் நகல்
தீர்மானத்தின் நகல்

பஞ்சாபில் உள்ள மாலவுட் சட்டமன்றத்தொகுதியில் இருக்கிறது கட்டோரேவாலா என்கிற கிராமம். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து, தங்கள் பிள்ளைகளின் உடல் நலனையும், எதிர்காலத்தையும் அழிக்கிற 'புகையிலை, புகையிலைப்பொருள்கள், போதைப்பொருள்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவை தங்கள் கிராமத்தில் கிடைக்கக்கூடாது என முடிவு எடுத்திருக்கிறது. அதன் முதல்கட்டமாக, உள்ளூர் கடைக்காரர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள்.

அந்தக்கூட்டத்தில், தாங்கள் தடை செய்யவிருக்கிற பொருள்களை கடைக்காரர்கள் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்கள். மீறினால், அவர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு அதிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாய் கிராம குருத்வாரா நிதிக்குச் செல்லும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது சென்ற மாதத்தின் இறுதியில் நிகழ்ந்திருக்கிறது.

Anti drugs
Anti drugs

சிறுவர்களும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதால் இப்படியொரு தீர்மானத்தை இயற்றினோம். அதை கிராமத்தலைவரிடமும் தெரிவித்து விட்டோம். எங்கள் தீர்மானத்தின் நகல் வைரலாகி விட்டதால், பலரும் எங்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தினரும் எங்களைப்போலவே புகையிலை மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை தடைவிதிக்க இருப்பதாக தெரித்திருக்கிறார்கள் என்கிறார்கள், கட்டோரேவாலா கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர்கள்.

மிக நல்ல விஷயம்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Headphone: வயர்லெஸ் ஹெட்ஃபோன் உரையாடலை ஒட்டு கேட்க முடியுமா? - பரபரப்பு கிளப்பிய கமலா ஹாரிஸ் பேட்டி

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தாததற்கான காரணத்தை வெளியிட்டு, சமூக ஊடக பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ஸ்டீபன் கோல்பர்ட்டின் டாக் ஷோவில் சமீபத்த... மேலும் பார்க்க

சீனா: ``மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி சரியா?'' - இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்

சீனாவில் இளைஞர்கள் மன பதட்டத்தைக் குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் கைக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசிஃபயர்களைப் (சூப்பி) பயன்படுத்துவது பரவிவருகிறது.சில ஆன்லைன் வர்த்தக மையங்கள் 2000-க்கும் மே... மேலும் பார்க்க

Labubu: உலகின் மிக விலையுயர்ந்த பொம்மை; 9 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது எப்படி?

உலகில் பல்வேறு வகையான பொம்மைகள் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது. அந்த வகையில் லாபுபு என்று அழைக்கப்படும் அரிய வகை பொம்மை 9.15 லட்சம் ரூபாய்க்கு வி... மேலும் பார்க்க

Saina Nehwal: `மீண்டும் முயற்சிக்கிறோம்" - பிரிந்த கணவருடன் இணைந்த சாய்னா நேவால்

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். பல சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். 2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய ... மேலும் பார்க்க

Tsunami: 12 வருடங்களுக்கு முன்பே கணித்தாரா ஜப்பானிய கலைஞர்? - `July5Disaster' வைரலாக காரணம் என்ன?

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவி... மேலும் பார்க்க

Dhoni: "கணவர் கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள்" - ரிலேஷன்ஷிப் ஜோக் அடித்த தோனி!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு கூலான கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஜாலியான மனிதரும் கூட என்பதை நெருக்கமாக பின்தொடரும் ரசிகர்கள் மட்டுமே அறிவர்.சமீ... மேலும் பார்க்க