செய்திகள் :

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

post image

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இருக்கும் மஹ்மத்பூரை சேர்ந்தவர் ராஜ் நாராயண் தாக்குர்(90). இவர் தற்போது தனது 5-வது மகன் திலிப் தாக்குர் தனக்கு தெரியாமல் குடும்ப சொத்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முஜாபர்பூர் கோர்ட்டிக்கு வந்தபோது அளித்த பேட்டியில், "எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். எங்களது சொத்து எனது தந்தையின் பெயரில் இருக்கிறது. எங்களுக்குள் இன்னும் சொத்தை முறைப்படி பிரித்துக்கொள்ளவில்லை. வாய்மொழியாக மட்டுமே பிரித்துக்கொண்டிருக்கிறோம்.

சொத்து பதிவு செய்த ஆவணம்

ஆனால் எனது மகன் திலிப் தாக்குர் நான் இறந்துவிட்டதாக சொல்லி குடும்ப சொத்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் பத்திர பதிவு துறையில் சொத்தை பதிவு செய்துள்ளனர். இதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே சட்டவிரோதமாக நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்து உடனே விசாரணை நடத்தி மோசடியாக நிலத்தை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நில பதிவை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் எனது மகன் மது பழக்கத்திற்கு அடிமையானவன் என்றும், இதற்கு முன்பும் குடிபோதையில் பல சொத்துக்களை விற்பனை செய்து இருக்கிறான் என்றும், குடும்பத்தில் யாரும் தனக்கு சாப்பாடு கொடுக்க மறுக்கிறார்கள் என்று முதியவர் தெரிவித்துள்ளார். முதியவரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அழுது வீடியோ வெளியிட்ட CRPF பெண் காவலர்; "தாமதமாக FIR போட்டதாகச் சொல்வது பொய்" - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகிலுள்ள பொன்னை நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மகள் கலாவதி (வயது 32), ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் காவலராக தேசப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குடும்பக் கட்டுப்பாடு செய்ய வற்புறுத்தல்? பெண் புகார்; அரசு மருத்துவமனை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலூர், சுக்காவழி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் அரசு... மேலும் பார்க்க

`NRC பயத்தில் முதியவர் விபரீத முடிவு' - மத்திய அரசை சாடும் திரிணாமுல் காங்கிரஸ்

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டால் தான் திரும்ப வங்க தேசத்துக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் 63 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவ... மேலும் பார்க்க

டெல்லி: `நாங்கள் உதவி கேட்டு கத்தினோம்' - தனக்கு நடந்த செயின் பறிப்பு குறித்து தமிழக எம்.பி.சுதா

திருடர்கள், வழிப்பறியில் ஈடுபடுவர்கள் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களின் இலக்கு வழிப்பறியில் ஈடுபடுவது ஒன்றுதான். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யிட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பள்ளி வளாக கிணற்றுக்குள் மாணவன் சடலம்... கொலையா? - உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்பட்டுவரக்கூடிய `தோமினிக் சாவியோ’ ... மேலும் பார்க்க

சேலம் சிறுமி மாயமான வழக்கு; சிறுமியை குடும்பத்தினரே விற்றார்களா? போலீஸ் தீவிர விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள புள்ளக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனர். மீனா கார... மேலும் பார்க்க