நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை
Saina Nehwal: `மீண்டும் முயற்சிக்கிறோம்" - பிரிந்த கணவருடன் இணைந்த சாய்னா நேவால்
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். பல சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். 2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலம், கமன்வெல்த் போட்டிகளில் இரு தங்கம் என தொடர்ந்து தன் சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவந்தார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் தன்னுடன் பயிற்சி பெற்ற காஷ்யப்யை 10 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்தவர், கடந்த 2018-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ள காஷ்யப், சர்வதேச அரங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். காஷ்யப் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறினார். சாய்னாவுடன் இணைந்து பணியாற்றினார். இதற்கிடையே, ஜூலை 13-ம் தேதி திருமண வாழ்க்கையில் இருந்து விலகவுள்ளதாக சாய்னா நேவால் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, காஷ்யப்-யும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த நேரத்தில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என மட்டும் யோசிக்கிறேன். நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். சாய்னாவின் இந்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் சாய்னாவும் கஷ்யப் பருபள்ளியும் மீண்டும் இணைந்து வாழ்வதாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக சாய்னா வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், ``சில நேரங்களில் தூரம் உங்களுக்கு இருப்பின் மதிப்பைக் கற்பிக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்." என இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...