நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !
நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், பன்வேலின் புறநகரில் உள்ள நைட் ரைடர்ஸ் பாரில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் குழு சனிக்கிழ்மை இரவு நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியோடு மது பாட்டில்களையும் உடைத்துள்ளனர். இந்த தாக்குதலின் விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.
அதில் உடைந்த மேசைகள், உடைந்த கண்ணாடிகள் மற்றும் நிறுவனத்தின் உட்புறங்கள் சூறையாடப்பட்டிருந்தன. "சத்ரபதி சிவாஜி மகாராஜின் புனித பூமியில் நடன பார்களுக்கு இடமில்லை. பன்வேலியிலோ அல்லது மாநிலத்தில் வேறு எங்கும் இதுபோன்ற ஆபாசங்கள் செழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று நவநிர்மாண் சேனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்
பன்வேல் போலீஸார் இந்த சம்பவத்தை அறிந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். "நாங்கள் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று வருகிறோம். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.