செய்திகள் :

Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" - தோனி எமோஷனல்!

post image

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.

தோனி
தோனி

ரேபிட் ஃபயர் பாணியில் தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவில் என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. அதற்கு தோனி சொன்ன பதில்கள்,

சென்னை - என்னுடைய இரண்டாவது தாய் வீடு, இந்த மண் தத்தெடுத்துக் கொண்ட மகன் நான்.

ரசிகர்கள் - அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.

பைக்குகள் - என் வாழ்வின் ஆகப்பெரும் காதல். இதைச் சொன்னால் என் மனைவிக்குப் பிடிக்காதுதான். பைக்குகள் மட்டும்தான் என் மீது எந்தப் புகாரும் சொல்லாது.

தல - எனக்கு அந்தப் பட்டம் பிடிக்கும். ரசிகர்களின் அன்பால் கிடைத்த பட்டம் அது.

தோனி
தோனி

விசில் போடு - இடையில் அணிக்காக வேறு பாடலை உருவாக்க நினைத்தோம். ஆனால், இந்தப் பாடலை ரீப்ளேஸ் செய்ய முடியாது என்பதால் அப்படியே விட்டுவிட்டோம். சென்னை என்றால் விசில் போடுதான்.

அம்மா - நமக்காக நிறையச் சிரமங்களை எதிர்கொள்பவர். நம்மைத் திட்டினாலும் நமக்கு அம்மாதான் எல்லாமே. அவர்களின் அன்பு அளப்பரியது.

மனைவி - எல்லா கணவர்களுக்கும் ஒரே விஷயம். மனைவியிடமிருந்து தப்பிக்க வீட்டில் நமக்கென ஒரு மூலை இருக்கும்.

தோனி
தோனி

மகள் - மகள்கள்தான் பெற்றோரை அதிக அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொள்வார்கள் எனக் கேட்டிருக்கிறேன். சகோதரி மற்றும் மகள் வழி அதை உணர்கிறேன். வாழ்வில் எனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த விஷயம் மகள்.

இந்தியா - நான் தேசப்பற்றுமிக்கவன். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அரிதானது. ஒரு விளையாட்டு வீரனாக எனக்கு அது கிடைத்தது. வாழ்நாளுக்குமான திருப்தியை அதன்மூலம் பெற்றிருக்கிறேன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" - தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்கள் என்னென்ன?

சென்னையில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தோனி கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு உடல்நலம் சார்ந்து சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்... மேலும் பார்க்க

Kohli: "அன்று அவர் கலங்கியபடி நின்றது வருத்தமாக இருந்தது" - விராட் கோலி குறித்து யூஸ்வேந்திர சாஹல்

2008-ம் ஆண்டுமுதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு (ஐபிஎல்-2025) தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி,... மேலும் பார்க்க

Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யுஸ்வேந்திர சஹால்

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் தி... மேலும் பார்க்க

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட ... மேலும் பார்க்க

`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.யுஸ்வேந்திர சஹால் - ... மேலும் பார்க்க

Chahal: `தினமும் இரண்டு மணிநேரம் அழுவேன்; தூக்கமே வராது’ - விவாகரத்து குறித்து சஹால்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.விவாகரத்துநடிகை, நடன... மேலும் பார்க்க