செய்திகள் :

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

post image

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி தனது உடல்நலம் விளையாட இன்னும் தகுதியாக இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

44 வயதாகும் தோனிக்கு முட்டிவலி இருப்பதால் அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சீசனில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

சிஎஸ்கே அணியும் கடந்த சீசனில் மோசமாக விளையாடியது. இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி பேசியதாவது:

நான் இன்னும் 5 வருடங்கள் விளையாடலாம் என எனது கண்களுக்கு மருத்துவர்கள் தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். ஆனால், உடலுக்கு இன்னும் வழங்கவில்லை.

என்னால் வெறுமனே கண்களை மட்டுமே வைத்துக்கொண்டு விளையாட முடியாது என சிரிப்புடன் பேசினார்.

கடந்த சீசனில் அன்கேப்ட் வீரர் என்ற விதியின் மூலம் தோனி ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டார்.

தோனி 226 போட்டிகளில் கேப்டனாக இருந்து 133 வெற்றிகள், 91 தோல்விகளைச் சந்தித்துள்ளார். 264 போட்டிகளில் விளையாடி 5,234 ரன்கள் குவித்துள்ளார். 39.13 சராசரியுடன் 137.54 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

CSK player MS Dhoni has said that his health is not yet fit to play.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

இந்திய வீரர் முகமது சிராஜ் வெளிநாட்டில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.இந்தத் ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 374 ரன்கள் முன்னிலை பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.England... மேலும் பார்க்க

இந்தத் தொடரின் அதிவேக அரைசதம்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிவேக அரைசதம் கடந்து அசத்தினார் இந்திய ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர். அவர் 39 பந்துகளை மட்டுமெ எதிர்கொண்டு டி20 ஸ்டைலில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார்... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்து வருகிறார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வர... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க