ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி
விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது வென்ற பார்க்கிங் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் 2023-ல் வெளியான திரைப்படம் பார்க்கிங். வாடகை வீட்டில் இருக்கும் இருவர் கார் பார்க்கிங் செய்யும்போது, ஏற்படும் பிரச்னையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது.
திரையரங்கு மற்றும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பார்க்கிங் படம், 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த துணைநடிகருக்கான விருதையும் பெற்றது.
இந்த நிலையில், விருது வென்ற பார்க்கிங் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் அழைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இயக்குநர் ராம்குமார், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள்.
எம்.எஸ். பாஸ்கருடான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்கவேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!