இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் ந...
நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்
கூலி படத்தில் இணைந்தது குறித்து நடிகர் ஆமிர் கான் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருவதுடன் அனிருத்தின் பின்னணி இசையுடன் ரஜினி, நாகர்ஜூனா, ஆமிர் கான் கதாபாத்திரங்கள் அறிமுகமாவது, சண்டைக் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அதிவேகமாக, தமிழ் டிரைலர் யூடியூபில் 1.1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளன.
இந்த நிலையில், கூலி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆமிர் கான், “இப்படத்திற்கான லோகேஷ் கனகராஜ் என்னை அணுகியபோது நான் நடிப்பதற்காக சம்பளமும் கதையும் கேட்கவில்லை. எப்போது படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்றுதான் கேட்டேன். காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் உடன் இணைந்து நடித்தால் போதும்.” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!