Coolie: "அவர் என்கிட்ட நல்ல காபி கேட்கிறாரு; நான் கமல் ஃபேன்னு இவர் சொல்றாரு" - ரஜினி கலகல
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது.

ஆமீர் கான், நாகர்ஜுனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
ரஜினி பேசுகையில், " படத்துல ஒரு சப்ரைஸ் கேமியோ இருக்குன்னு லோகேஷ் கனகராஜ் சொன்னார். என்னுடைய நினைப்பெல்லாம் கமல் பக்கம்தான் போகுது.
அவரை கேமியோ பண்றதுக்கு சம்மதிக்க வச்சுட்டாரானு எண்ணம்தான் எனக்குள்ள ஓடிட்டு இருந்தது. ஏன்னா, ஏற்கெனவே அவர்கூட 'விக்ரம்' திரைப்படம் செய்திருக்காரு." என்றவர், " 'கைதி' திரைப்படம் பார்த்ததும் லோகேஷ் கனகராஜைக் கூப்பிட்டேன்.
வேற யாரும் கூப்பிடுறதுக்கு முன்னாடி இங்க வந்திடுங்கன்னு சொன்னேன்.

அவரை அழைத்து 'எனக்கு எதவாது சப்ஜெக்ட் வச்சிருக்கீங்களா'னு கேட்டேன். அவர் 'உங்களுக்கு இல்லாத சப்ஜெக்ட்டா , வச்சிருக்கேன் சார்.
அதை சொல்றேன் உங்களுக்கு. நான் கமல் ஃபேன்'னு சொல்லிட்டே இருந்தாரு. நான் அதை அவர்கிட்ட கேட்டேனா? நெல்சன் என்னிடம் வந்து 'நல்ல காஃபி கிடைக்குமா'னு கேட்கிறாரு.
லோகேஷ் 'நான் கமல் ஃபேன்'னு சொல்றாரு." என நகைச்சுவையுடன் பேசினார்.