நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!
நடிகை வர்ஷினி சுரேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடர், தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மகளே என் மருமகளே தொடராக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் பார்த்த ரேஷ்மா பசுபுலேட்டியை, இந்தத் தொடரில் நேர்மறையான பாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யுவன் மயில்சாமி நடிக்கும் தங்கமகள் தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்தத் தொடருக்கு மாற்றாக மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
மகளே என் மருமகளே தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!