செய்திகள் :

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

post image

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்தின் இடம்பெற்ற பாடலான 'பொட்டல முட்டாயே’ 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தில் இடம் பெற்றிருந்த 'பொட்டல முட்டாயே’ பாடலை யூடியூப்-ல் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இப்பாடலை சுப்லக்‌ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாபா பாஸ்கர் இப்பாடலுக்கான நடனத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

The song 'Pottala Muttaye', featured in the film Thalaivan Thalaivi starring actor Vijay Sethupathi, has crossed 30 million views.

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் திரைப்பட குழுவினரை வாழ்த்தினார்.அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பா... மேலும் பார்க்க

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

நடிகை வர்ஷினி சுரேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடர், தமிழ... மேலும் பார்க்க

சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்வதற்கு சில அளவுகோள்கள் உள்ளன. முதலில், அப்படம் நம் சிந்தனையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அதன் கதைக்கு கலை ரீதியான பங்களிப்பு இருக்கிறதா? இறுதியாக, சினிமா என்கிற மா... மேலும் பார்க்க

யோவ் நான் கேட்டேனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

நடிகர் ரஜினி இயக்குநர் லோகேஷ் நேர்காணலை எவ்வளவு நேரம் பார்த்தாலும் முடியவில்லை என கிண்டலாக கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் ... மேலும் பார்க்க

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

நடிகர் நாகார்ஜுனா கூலி இசை வெளியீட்டு விழாவில் கூலி திரைப்படம் 100 பாட்ஷாவுக்கு சமம் எனக் கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டி... மேலும் பார்க்க

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கூலி இசைவெளியீட்டு விழாவில் சத்யராஜ் குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுக... மேலும் பார்க்க