ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!
ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடிக்கு மாலை அணிவித்தபோது, எம்பிக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவ் என்று முழக்கம் எழுப்பினர்.
மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்திய பாதுகாப்புப் படையின் துணிச்சலைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.