செய்திகள் :

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தி வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி.

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்து இருந்தார்.

மேலும், இப்படத்தில் மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 8 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஓடிடியில் பறந்து போ!

இயக்குநர் ராமின் பறந்து போ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்ப... மேலும் பார்க்க

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

சுரேஷ் கோபி நடிப்பில் உருவான ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகி... மேலும் பார்க்க

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியா்கள் நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.இந்தியாவின் கிஷோா் குமாா், ஸ்ரீகாந்த், ரமேஷ் புதிலால... மேலும் பார்க்க

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை இன்று(ஆக. 4) நடைபெற்றது.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்... மேலும் பார்க்க

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் மூன்று திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வலம் வருபவர் ... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் - 2, இனி 6 நாள்களும் ஒளிபரப்பாகாது!

எதிர்நீச்சல் -2 தொடர் இனி வாரத்தின் 6 நாள்களும் ஒளிபரப்பாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சியின் வருகையால் எதிர்நீச்சலின் ஒளிபரப்பு நாள்களில் ஒன்று குறைந்துள்ளது. அதாவது... மேலும் பார்க்க