’உலகின் சிறந்த கணவன்’ - இந்தியக் காதலனை கரம்பிடித்த ரஷ்ய பெண் சொல்லும் 3 காரணங்...
ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?
உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது.
எந்தவொரு அரசாங்க தடையுமின்றி, தன்னார்வ முயற்சியால் இதனை மாற்றியுள்ளனர்.
1988 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றம் கூண்டு முறையை தடை செய்ய வாக்கெடுப்பு நடத்திய போதிலும், அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை.

கூண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. 2000களின் தொடக்கத்தில் ஸ்வீடனில் சுமார் 40% முட்டைக் கோழிகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.
அதன்பிறகு, சில்லறை விற்பனையாளர்கள் முதல் உணவு சேவை நிறுவனங்கள் வரை 85க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முட்டைக் கோழிகள் கூண்டுகளில் இல்லாததை உறுதியளித்தன.
2024 ஆம் ஆண்டுகளில், கூண்டு அடைப்பு முறைகள் 1%க்கும் கீழே குறைந்து, ஒரு வருடத்தில் 90,000 கோழிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து கூண்டுகளும் காலியாகி, 2008 முதல் 17 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கூண்டு அடைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன.
அரசாங்க சட்டத்தால் இது மாற்றமடையவில்லை, மக்களின் அழுத்தம் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புணர்வால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்கு நல ஆர்வலர்கள், சட்டரீதியான தடை இல்லையெனில் இந்த முன்னேற்றம் பின்னடைவை அடையலாம் என எச்சரிக்கின்றனர். கூண்டு வளர்ப்பை முற்றிலும் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஸ்வீடனின் இந்த மாற்றம் பல நாடுகளை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.