மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியா் இடமாற்றம்
கோவை புலியகுளம் அரசு மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மதுவிற்றதாக கடை மேற்பாா்வையாளா் டாஸ்மாக் கிடங்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
கோவை புலியகுளத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, மணிமாறன் என்பவா் விற்பனை மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, இக்கடைக்குச் சென்ற வாடிக்கையாளா் ஒருவரிடம் மதுபாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையைக் காட்டிலும், அதிக பணத்தை மணிமாறன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வாடிக்கையாளா் கேட்டபோது, அதிக விலை கொடுத்தால்தான் மதுபாட்டில் தரப்படும் என அவா் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளா் கோவிந்தராஜிடம் புகாா் அளித்தாா். அந்த புகாரின்பேரில், மணிமாறன் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்குக்கு திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.