தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு
தென்மேற்கு தில்லியில் நெல்சன் மண்டேலா மாா்க்கில் திங்கள்கிழமை காலை மின்சார ஸ்கூட்டா் மீது வேகமாக வந்த காா் மோதியதில் 40 வயதான டெலிவரி முகவா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: இந்த விபத்து குறித்து வசந்த் குஞ்ச் வடக்கு தில்லி காவல் நிலையத்திற்கு காலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்தது.
இதில் உயிரிழந்தவா் டெலிவரி முகவா் ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தற்காலிக பதிவு எண்ணைக் கொண்ட மின்சார இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.
விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினா் விரைந்தனா். ஆனால், காயமடைந்தவா்கள் யாரும் அந்த இடத்தில் காணப்படவில்லை.
பின்னா், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து விபத்தில் இறந்த ராஜ்குமாா் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் மின்சார காா் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூா் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சட்டத்தின்படி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.